பிஸ்லெரி நிறுவனத்தின் பேக் செய்யப்பட்ட குடிநீர் பாதுகாப்பற்றது எனக் கண்டறியப்பட்டுள்ளதால், அந்நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
பிஸ்லெரி குடிநீர் மாதிரியில் புற்றுநோயுடன் தொடர்புடைய ரசாயனங்கள் இருந்ததாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் குற்றச்சாட்டு.
நிறுவன வளாகத்தில் சேகரிக்கப்பட்ட குடிநீர் மாதிரியில், குடிநீரை சுத்திகரிக்கும்போது உருவாகும் புரோமேட் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு இருந்ததால் பாதுகாப்பற்றது எனக் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து நடத்தப்பட்ட மறுபரிசோதனையிலும் (PAHs) எனப்படும் வேதிப்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டு, அந்த மாதிரி மீண்டும் பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டது.
