திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 11 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கில், தவெக ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகி ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். கைதான நிர்வாகி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை.. ஆட்டோ டிரைவர் கைது
