திருச்சி மாவட்டம், முசிறி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கூறியிருப்பதாவது திருச்சி மாவட்டம் முசிறி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவச் சிகிச்சை அளிக்கவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணத் தொகையை விரைந்து வழங்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
