Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பில்லி சூனியம் எடுப்பதாகக் கூறி ரூ.56 லட்சம் மோசடி புகார்! இந்து மகாசபா நிர்வாகி கைது!

சென்னையைச் சேர்ந்த பெண்ணிடம் பில்லி சூனியம் எடுப்பதாகக் கூறி, மூன்று ஆண்டுகளில் ரூ.56 லட்சம் பெற்றதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அகில பாரத இந்து மகாசபா மாநில பொதுச்செயலாளர் நிரஞ்சனை போலீசார் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் நிரஞ்சன் (45). இவர் அகில பாரத இந்து மகாசபா அமைப்பின் மாநில பொதுச்செயலாளராக உள்ளார்.

சென்னை பழவந்தாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்பவரிடம், அவரது வீட்டில் பில்லி சூனியம் இருப்பதாகவும், அதனை அகற்றித் தருவதாகவும் நிரஞ்சன் கூறியதாகத் தெரிகிறது.

இதனை நம்பிய காயத்ரி, கடந்த மூன்று ஆண்டுகளாக நிரஞ்சனிடம் பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ.56 லட்சம் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்ட பிறகும் பில்லி சூனியத்தை அகற்றவில்லை எனக் கூறி, நிரஞ்சன் மீது காயத்ரி சென்னை பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்ட பழவந்தாங்கல் போலீசார், கும்பகோணத்தைச் சேர்ந்த நிரஞ்சனை நேற்று கைது செய்து விசாரணைக்காக சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பில்லி சூனியம் எடுப்பதாகக் கூறி ரூ.56 லட்சம் பெற்றதாக எழுந்த புகாரில் இந்து மகாசபா மாநில நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!
Secret Link