2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள நேபாள பிரதமர் பாலேந்திர ஷா, டெல்லி ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து வர்த்தகம், எரிசக்தி, உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து இணைப்பு குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். இச்சந்திப்பின்போது கல்வி, சுகாதாரம், விவசாயம், விண்வெளி உள்ளிட்ட துறைகளில் இருநாட்டு ஒத்துழைப்பை அதிகரிக்கும் வகையில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், நேபாள பிரதமர் இன்று ஜனாதிபதி திரவுபதி முர்முவையும் சந்திக்க உள்ளார்.
இந்தியா-நேபாளம் இடையே 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
