திருச்சியில் காவிரியின் கிளை வாய்க்காலான பெருவளை வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்களில் பச்சைத் துண்டைக் கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி ஆற்றில் தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டாலும் அந்த நீர் காவேரி டெல்டா பகுதி முழுவதும் முழுமையாக போய் சேராமல் விவசாயிகள் பயிரிட்ட பயிறுகள் கருகும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது இதனால் விவசாயிகள் கதிர் விடும் நிலையில் தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில்பொதுமக்கள் குறை தீர்க்கும் நாளான இன்று
திருச்சியில் காவேரியின் கிளை வாய்க்காலான பெருவளை வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்களில் பச்சைத் துண்டைக் கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளை தமிழக அரசு கண்டு கொள்ளாமல் கண்களை மூடி இருப்பதை குறிக்கும் வகையில் அவர்கள் கண்களைக் கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.பிறகு விவசாயிகள் மாவட்ட கலெக்டர் பிரத்திக் தாயள் யை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
