பூமிக்கு மிக அருகில் நிலவு வரும்போது வழக்கமான பௌர்ணமிகளை விட 14% பெரிதாகவும், 30% அதிக பிரகாசமாகவும் காட்சியளிக்கும் ‘சூப்பர் மூன்’ நிகழ்வுகள் அடுத்தடுத்து 4 முறை நடைபெற உள்ளன. நவ.24-ம் தேதி தோன்றும் ‘பீவர் மூன்’ நிகழ்வை தொடர்ந்து, டிச.23, ஜன.22 மற்றும் பிப்.20 ஆகிய தேதிகளிலும் முழுநிலவு மிக பிரகாசமாக தோன்றவுள்ளது. இந்த அரிய வானியல் நிகழ்வின்போது நிலவு வழக்கத்தை விட மிகவும் அழகாகவும், தெளிவாகவும் காட்சியளிக்கும் என்பதால் வானியல் ஆர்வலர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
வானில் அடுத்தடுத்து தோன்றவுள்ள 4 அரிய சூப்பர் மூன் நிகழ்வுகள்
