சுவிட்சர்லாந்தில் இன்று நடைபெறவுள்ள உலக சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் தமிழக கிராண்ட்மாஸ்டர் குகேஷுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், உலக சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் கிராண்ட்மாஸ்டர் குகேஷுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குகேஷின் அபாரத் திறமை, விடாமுயற்சி மற்றும் சாதனைகள் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளன. சதுரங்கப் பலகையில் உங்களது சிறப்பான ஆட்டத்தின் மூலம் தொடர்ந்து வரலாறு படைக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
