தூத்துக்குடி சாந்தப்பர் லேன், பெரேரா தெருவைச் சேர்ந்தவர் சிங்காரம் மகன் லிபோரியஸ் (59). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். மேலும், புதிய துறைமுகத்தில் சரக்குகளை லாரிகள் மூலம் ஏற்றி இறக்கும் பணிகளை மேற்பார்வை செய்து வருகிறார்.
தூத்துக்குடி செய்திகள்
இந்நிலையில், கடந்த 22ஆம் தேதி கப்பல் மூலம் கனடாவிலிருந்து வந்த பட்டாணி சரக்குகளில் சுமார் 25 டன் பட்டாணியை டிப்பர் லாரி ஓட்டுநர் தூத்துக்குடி 3 சென்ட் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் விஜய் (29) என்பவர் உரிய அனுமதியின்றி எடுத்துச் சென்றுள்ளார். மேலும், துறைமுகம் கிரீன் கேட் பகுதியில் சிஐஎஸ்எப் வீரர்கள் தடுத்து நிறுத்துமாறு எச்சரித்தும் லாரி டிரைவர் நிற்காமல் சென்றுள்ளார்.
கடத்தப்பட்ட பட்டாணியின் மதிப்பு சுமார் 10லட்சம் ஆகும். இந்த நிலையில் நேற்று அதிகாலை சுமார் 02.00 மணியளவில் டிப்பர் லாரி போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது. மேலும், சுமார் 12 டன் பட்டாணி லோடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெர்மல் நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
