தமிழ்நாட்டில் ஆட்சியருக்கே பாதுகாப்பில்லாத மோசமான சூழல் நிலவுவதாகத் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி சாடியுள்ளார். அண்ணா அறிவாலயத்தில் பேசிய அவர், பொய்யான செய்தி எனக் கூறியவர்கள் இப்போது என்ன பதில் சொல்லப் போகிறார்கள் எனக் கேள்வி எழுப்பினார். கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு பயம் ஏற்படும் நிலைக்குச் சென்றுள்ளதாகவும், தவெக எம்.எல்.ஏ. விவகாரத்தை நாடாளுமன்றத்திலும் எழுப்புவோம் என்றும் அவர் கூறினார்.
கலெக்டருக்கே பாதுகாப்பில்லை; நாடாளுமன்றத்திலும் எழுப்புவோம்-எம்பி கனிமொழி
