Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தீபத்தூணில் தீபம் ஏற்ற விடாமல் ஜனநாயகத்தின் குரலை ஒடுக்குவதா?- எல். முருகன்

தீபத்தூணில் தீபம் ஏற்ற விடாமல் ஜனநாயகத்தின் குரலை ஒடுக்குவதா?- எல். முருகன்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால அனுமதி வழங்கிய போதிலும் அதனை எதிர்த்து, இந்த வழக்கில் தவெக அரசு மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது என பாஜக நிர்வாகி எல். முருகன் கூறியுள்ளார்.

எல். முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால அனுமதி வழங்கிய போதிலும் அதனை எதிர்த்து, இந்த வழக்கில் தவெக அரசு மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது, கார்த்திகை தீபத் திருநாள் என்பது தமிழர்களின் ஆன்மிக மற்றும் பண்பாட்டுப் பாரம்பரியத்துடன் பின்னிப் பிணைந்த திருவிழா. இத்தகைய புனிதமான நாளில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு எவ்விதத் தடையும் ஏற்படாத வகையில் ஒத்துழைப்பு தர வேண்டியது தமிழக அரசின் கடமையாகும். ஆனால் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற விடக்கூடாது என்பதற்காக தவெக அரசு பெரும் அடக்குமுறை கட்டவிழ்த்து விட்டுள்ளது,

திருப்பரங்குன்றம் மலை உச்சி உட்பட்ட மலை முழுவதும், கிரிவலப் பாதைகள், திருப்பரங்குன்றம் நுழைவு வளைவு முதல் 16 கால் மண்டபம் வரை செல்லும் சாலை, கிரிவலப் பாதைக்கும் மலை அடிவாரப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதிகளில், டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி விமானங்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், அதனைச் சுற்றியுள்ள சர்ச்சைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, இந்து முன்னணி உட்பட இந்து அமைப்புகளின் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பாஜக மாநில தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக தலைவர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய ஜனநாயக வரலாற்றில் 1975-77 எமர்ஜென்சி காலம் என்பது குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்ட, எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்ட, ஊடகங்களின் குரல் ஒடுக்கப்பட்ட இருண்ட அத்தியாயமாகப் பதிவாகியுள்ளது.அந்த எமர்ஜென்சி காலத்தை நினைவுபடுத்தும் வகையில், தற்போது திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகள் அமைந்திருக்கிறது.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளதால் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய்க்கும் சகவாச தோஷம் பற்றிக்கொண்டு விட்டதா என்ற கேள்வி எழுகிறது. 1975-ல் எமர்ஜென்சி என்ற பெயரில்@ எதிர்க்கட்சித் தலைவர்களின் குரல் ஒடுக்கப்பட்டது. இன்று சட்டம் ஒழுங்கு என்ற பெயரில் அரசியல் எதிர்ப்புக் குரல்களுக்கு முட்டுக்கட்டை போடப்படுகிறது.அரசாங்கத்தை விமர்சிப்பதும், தங்களது மத நம்பிக்கைகளுக்காகக் குரல் கொடுப்பதும் ஜனநாயகத்தில் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள். அவற்றை அதிகாரத்தின் மூலம் கட்டுப்படுத்த முயல்வது கட ஆரோக்கியமான ஜனநாயக நடைமுறையாக இருக்க முடியாது.நீதிமன்ற உத்தரவுகளை மதிப்பதும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதும் அரசின் கடமை. அதேநேரத்தில், பக்தர்களின் வழிபாட்டு உரிமையையும், அரசியல் கட்சிகளின் ஜனநாயக உரிமைகளையும் அரசு மதிக்க வேண்டும். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும், உச்ச நீதிமன்ற உத்தரவுகளைச் சட்டப்படி நடைமுறைப்படுத்தவும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட்டு, உச்ச நீதிமன்ற உத்தரவுபடி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றிட தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!
Secret Link