Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் அருகே ”வெற்றி பயண” அரசு பஸ்சில் திடீர் புகை… பரபரப்பு

கரூர் அருகே ”வெற்றி பயண” அரசு பஸ்சில் திடீர் புகை... பரபரப்பு

கரூர் அருகே வெற்றிப் பயணம் திட்டத்தின் கீழ் இயக்கப்பட்ட அரசு பேருந்தின் பின்பக்க பிரேக் ட்ரம் பகுதியில் திடீரென புகை வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டுநரின் துரித நடவடிக்கையால் பயணிகள் பாதுகாப்பாக கீழே இறக்கப்பட்டு, மாற்றுப் பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

கரூர் பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கோவை

மண்டலத்தைச் சேர்ந்த, வெற்றிப் பயணம் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் அரசு பேருந்து ஒன்று, கரூர் வழியாக உடுமலைப்பேட்டைக்குச் சென்று கொண்டிருந்தது.

அப்போது, திருக்காம்புலியூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, பேருந்தின் பின்பக்க பிரேக் ட்ரம் பகுதியில் இருந்து திடீரென புகை வெளியேறி சாலையோரம் பேருந்து நின்றது.

இதனைத் தொடர்ந்து, ஓட்டுநர் உடனடியாக பேருந்தை சாலையோரத்தில் நிறுத்தி, அதில் பயணம் செய்த பயணிகளைப் பாதுகாப்பாக கீழே இறக்கினார். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை ஊற்றி புகையைக் கட்டுப்படுத்தினர்.

இதையடுத்து, பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மாற்றுப் பேருந்து மூலம் தங்களது பயணத்தைத் தொடர ஏற்பாடு செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் மழைக்காலங்களில் அரசு பேருந்துகளுக்குள் தண்ணீர் புகுவது, பேருந்துகள் பழுதடைந்து நடுவழியில் நிற்பது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகப் பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அரசு பேருந்துகளின் தரம் மற்றும் பராமரிப்பு குறித்து தமிழக அரசு, போக்குவரத்துத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு, பழுதடைந்த பேருந்துகளைச் சீரமைக்கவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

error: Content is protected !!
Secret Link