கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) 2027-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாது என்றும், எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவு அளிக்காது என்றும் அதன் ஒருங்கிணைப்பாளர் அபிஜீத் தீப்கே அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அபிஜீத் தீப்கே நாங்கள் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. ஆனால், தேர்தல்கள் இளைஞர்கள் சார்ந்த பிரச்சினைகளின் அடிப்படையில் நடைபெற வேண்டும். சாதி, மதத்தின் பெயரால் நாம் இன்னும் எவ்வளவு காலத்திற்குப் போட்டியிடப் போகிறோம்..? என கேள்வி எழுப்பினார்.
தேசிய அரசியல் வேலைவாய்ப்பு மற்றும் தரமான கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்று அவர் கூறினார். உலகம் இன்று செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என பல விஷயங்களை அடிப்படையாக கொண்டு முன்னேறி கொண்டிருக்கிறது என்று செய்தியாளர்களிடம் பேசிய திப்கே கூறினார்.
