Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பராமரிப்புப் பணிகள் நிறைவு: திருச்சியிலிருந்து ஊட்டி புறப்பட்ட மலை ரயில் என்ஜின்!

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் இருந்து உலகப் புகழ்பெற்ற ஊட்டி மலை ரயில் என்ஜின பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு வண்ணங்கள் திட்டப்பட்டு லாரி மூலம் ஊட்டிக்கு புறப்பட்டு சென்றது

மலைகளின் ராணி என்று போற்றப்படும் ஊட்டியையும், மேற்கு தொடர்ச்சி மலையினையும், பயணித்துக்கொண்டே ரசிக்கும் வகையில், மலை பாதையில் மலை ரயில்கள் இயக்கப்பட்டுவருகிறது.

கண்கவர் வண்ணங்களுடன், பயணிகளை மகிழ்வித்து, உதகை மலை அழகை கண்டுகளிக்க உதவும் ரயிலின் இன்ஜின்கள் அனைத்தும், திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தயாரிக்கப்பட்டவை என்பது மலைக்கோட்டை மாநகரத்திற்கு கிடைத்த பெருமை.

அங்கு பராம்பரிய முறையில் நிலக்கரி மூலம் சிறப்புக்காக இயக்கப்பட்டு வந்த ரயில் இன்ஜின்களை, தொடக்கத்தில் ஸ்டார்ட் செய்வதற்காக பர்னஸ் ஆயில் பயன்படுத்தப்பட்டது.
அதன்பின்னர், டீசல், பயோ டீசல், குருடு ஆயில் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டன. தற்போது சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு இன்ஜின் ஸ்டார்ட் செய்வது முதல், தொடர்ந்து இயக்கப்படுவது வரை முழுக்க முழுக்க High speed disel மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

தற்போது குன்னூர் ரயில் நிலையத்தில் இருந்து ஊட்டிக்கு பயணிக்க ஏதுவாக 9 இன்ஜின்கள் பயன்பாட்டில் உள்ளன. அதில் ஒன்று பராமரிக்கப்பட்டு இன்று உதகைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் 1 ரயில் இன்ஜின் பராமரிப்புப்பணிக்காக உதகையில் காத்திருக்கின்றன.

உயரமான மலைப்பாதைகளில் கடுமையான பயணத்தை மேற்கொள்ளும் என்ஜின் என்பதால், ரயில்வே நிர்வாகம் எவ்வித சமரசமும் செய்துக் கொள்ளாமல், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை இன்ஜின்களை முழுமையாக பராமரிப்புக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறது.

அதன் ஒருபகுதியாக கடந்த வருடம் ஒரு இன்ஜின் பராமரிப்புப் பணிக்காக பொன்மனை பணிமனைக்கு வந்தது.

அந்த ரயில் என்ஜின் திருச்சி பொன்மலை பணிமனையில் இருந்து பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு வர்ணங்கள் தீட்டப்பட்டு புதுப்பொலிவுடன் ஊட்டி மலைக்கு ட்ரெய்லர் லாரி மூலம் சென்றது

ஏற்கனவே குன்னூரில் இருந்து ஊட்டிக்கு 9 என்ஜின்கள் தற்போது வரை இயக்கப்பட்டு வருகின்றன அதனைத் தொடர்ந்து பொன்மலை ரயில்வே பணிமனையில் புதியதாக ஒரு இந்தியன் தயாரிப்பதற்கான ஆர்டரும் தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!
Secret Link