திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் பல்வேறு முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
திருப்பரங்குன்றம் தர்காவுக்குச் செல்லும் பக்தர்களைத் தடுக்கக் கூடாது என்றும், உரிய கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. மேலும், தர்காவுக்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) பாதுகாப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
தீபம் ஏற்றுவதற்கான நேரத்தை நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் கட்டாயம் ஆஜராக வேண்டும்; ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், மாநில அரசும் கோயில் நிர்வாகமும் இணைந்து நீதிமன்ற உத்தரவுகளையும் அளித்த வாக்குறுதியையும் மீறியுள்ளதாக உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது நீதிமன்ற உத்தரவை அப்பட்டமாகவும் துணிச்சலாகவும் மீறிய செயல் என்றும், கோயில் நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றி நீதிமன்ற உத்தரவுக்குத் தவறான விளக்கம் அளித்து வேண்டுமென்றே செயல்பட்டுள்ளதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது
