திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு மதுரைக்கு வருகை தந்துள்ளது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் அறங்காவலர் குழுவைக் கலைத்து, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளிடம் கோயில் நிர்வாகப் பொறுப்பை உச்சநீதிமன்றம் ஒப்படைத்துள்ளது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி இன்று மாலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
