மும்பையிலிருந்து ரயில் மூலம் சென்னைக்குப் போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கடந்த 26-ஆம் தேதி சென்னை கொரட்டூர் ரயில் நிலையத்தில் போலீசார் மாறுவேடத்தில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த அஜித்குமார் (26) என்ற இளைஞரைப் பிடித்து சோதனை செய்ததில், அவரிடம் 3,500 போதை மாத்திரைகள் மற்றும் ஒரு கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்த போலீசார், அஜித்குமாரைக் கைது செய்தனர். மேலும், இந்தப் போதைப்பொருள் விற்பனை வலையமைப்பில் தொடர்புடைய மற்ற நபர்களையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
