டில்லியில் மசாஜ் மற்றும் ஸ்பா மையங்கள் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து, போலீசார் 4 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். பஹர்கஞ்ச், நபி கரீம், கரோல் பாக் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மையங்களில் வாடிக்கையாளர்கள் போல் மாறுவேடத்தில் சென்ற போலீசார், தகவலை உறுதி செய்த பின்னர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் 29 பெண்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். ஸ்பா உரிமையாளர்கள், மேலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
மசாஜ் மையங்கள் என்ற பெயரில் பாலியல் தொழில்.. 29 பெண்கள் மீட்பு
