இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் சார்பில் 191 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தலைமை சட்ட உதவியாளர், அரசு வழக்கறிஞர், மூத்த விளம்பர ஆய்வாளர், இளநிலை மொழிபெயர்ப்பாளர், பணியாளர் மற்றும் நல ஆய்வாளர் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்பட உள்ளன. 12-ம் வகுப்பு, எல்.எல்.பி., முதுகலை மற்றும் எம்.பி.ஏ. படித்தவர்கள் பதவிகளுக்கு ஏற்ப விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 18 முதல் 40 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4ம் தேதி கடைசி நாள். https://www.rrbapply.gov.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
12ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரயில்வேயில் 191 காலிப்பணியிடங்கள்
