Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் கத்தி முனையில் மிரட்டிய ரவுடி கைது

65 வயது முதியவர் கொலை- 13 வயது சிறுமி உட்பட 3சிறார்கள் கைது!

திருச்சி உறையூர் காவல்காரன் தெருவை சேர்ந்தவர் சியாம் சுந்தர் (வயது 40) இவர் நேற்று காஜா பேட்டை பெல்சி மைதானம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த ஒரு வாலிபர் சியாம் சுந்தரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூபாய் ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து சியாம் சுந்தர் பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் காஜா பேட்டை பெல்சி மைதான பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை செய்த போது அவர் காஜாபேட்டை மதுரை வீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 33) என்பதும், இவர் தான் ஷ்யாம் சுந்தரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றார் என தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சந்திரசேகரனை கைது செய்து அவரிடமிருந்து பணம் மற்றும் கத்தியை பறிமுதல் செய்னர். கைது செய்யப்பட்ட சந்திரசேகரன்
ரவுடி என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!
Secret Link