Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மனைவி கண்முன்னே கணவர் வெட்டி படுகொலை-திருச்சியில் சம்பவம்

மனைவி கண்முன்னே கணவர் வெட்டி படுகொலை-திருச்சியில் சம்பவம்

திருச்சி அருகே மனைவி கண் முன்னாலே கணவனை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவத்தில் ஐந்து பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

திருச்சியை அடுத்த குழுமணி அருகே பேரூர் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன்.ஆனந்த் (வயது40) இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. ஆனால் குழந்தைகள் இல்லை. இவர்கள் விட்டில் ஆடு, மாடு வளர்த்து வருகிறார்கள் இவர்களுடைய ஆடு மாடுகளை அந்த பகுதியில் உள்ள வயல் வெளி பகுதியில் தினமும் மேய்ச்சலுக்காக ஒட்டி செல்வது வழக்கம்.இந்த நிலையில் நேற்று மாலை குழுமணி கொடிங்கால் வாய்க்கால் பகுதியில் ஆடு மாடுகளை மேய்த்து கொண்டு பால் கறவைக்கு தாமதமானதால் மனைவியையும் ,ஆடு மாடுகளையும் ஒட்டி வருவதற்காக ஆனந்த மோட்டார் சைக்கிளில் பேரூர் பகுதியில் இருந்து குழுமணி கொடிங்கால் பகுதியில் புதியதாக அமைய இருக்கும் திருச்சி கரூர் புறவழிச் சாலையில் உள்ள அணுகு சாலை பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது ஆனந்தை வழிமறித்த மர்ம ஆசாமிகள் தான் கொண்டு வந்து மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வெட்ட முயன்றுள்ளனர். இதை கண்ட அவருடைய மனைவி இங்கிருந்து தப்பி ஓடி விடுங்கள் என்று அலறி சத்தம் போட்டு உள்ளார். இதனை கண்ட ஆனந்த் அதிர்ச்சியடைந்து அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளார். ஆனால் ஆனந்தை வழிமறித்து அந்த கும்பல் அவரை அரிவாளால் முகத்தில் சரமாரியாக வெட்டி,முகம் அடையாளம் தெரியாத அளவிற்கு முகத்தை சிதைத்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். தன் கண் முன்னே தன்னுடைய கணவரை வெற்றி கொலை செய்த சம்பவத்தால் முத்துலட்சுமி கதறி அழுதுள்ளார்.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வருவதற்குள்கொலை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த கொலை குறித்து
தகவல் அறிந்த ஜீயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். கொலை செய்யப்பட்ட ஆனந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் மோப்பநாய் காவேரி வரவழைக்கப்பட்டது அது மோப்பம் பிடித்துக் கொண்டு சுமார் 200 மீட்டர் தாண்டி பேரூர் அக்ரஹாரம் பகுதி வரை சென்றது. பிறகு சம்பவ இடத்தில் திருச்சி மாவட்ட போலீஸ் எஸ் பி டோங்ரே பிரவீன் உமேஷ் விரைந்து வந்து விசாரனை நடத்தினர். பின்னர் ஜீயபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று அங்கு போலீசாரிடம்
விசாரனை செய்தார். இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில்
கொலை செய்யப்பட்ட ஆனந்தின் தங்கை சரண்யா என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இட பிரச்சனை தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு, சரண்யா தாக்கப்பட்டு ச திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இச்சம்பம் தொடர்பாக சரண்யா ஜீயபுரம் போலீசில் கடந்ந இரண்டு நாட்களுக்கு
முன்னர் புகார் கொடுத்துள்ளார் . இதையடுத்து ஜீயபுரம் போலீசார் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து சமாதானம் செய்து வைத்ததாகவும் தெரிய வந்தது. புகார் கொடுத்த உடன் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று இந்த கொலை சம்பவம் நடைபெற்றிருக்காது என்று
கொலை செய்யப்பட்ட ஆனந்தின் உறவினர்கள் கதறி அழுதனர்.
ஆனந்தின் தங்கை சரண்யா ஜீயபுரம் போலீசில் கொடுத்த புகாரை ஜீயபுரம் போலீஸ் நிலையதரதில் பணியாற்றிய ஏட்டு சங்கர் என்பவர் விசாரணை செய்து வந்தார்என தெரிய வந்தது இந்நிலையில் இன்று இந்த படுகொலை நடைபெற்ற சம்பவத்தை தொடர்ந்து ஜீயபுரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய ஏட்டு சங்கர் அதிரடியாக ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இந்நிலையில் கொலை சம்பந்தமாக சந்தேகத்தின் பேரில் 5 பேரை ஜீயபுரம் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!
Secret Link