Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தற்கொலை வதந்தியைப் பரப்பி பணம் சம்பாதிக்கிறார்கள் – தேவி பிரியா! ஆதங்கம்

தற்கொலை வதந்தியைப் பரப்பி பணம் சம்பாதிக்கிறார்கள் – தேவி பிரியா! ஆதங்கம்

தமிழ்த் திரையுலகம் மற்றும் சின்னத்திரையில் தனது தனித்துவமான நடிப்பாலும், குரலாலும் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர் நடிகை தேவிப்பிரியா. தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் பரவி வரும் ஆதாரமற்ற வதந்திகளுக்கு எதிராக அவர் சமீபத்தில் தனது வேதனையைப் பதிவு செய்துள்ளார்.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை தேவிப்பிரியா, சில யூடியூபர்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கில் தன்னைப் பற்றித் தவறான தகவல்களையும், தற்கொலை வதந்திகளையும் பரப்பி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

தேவி பிரியா அந்த பேட்டியில் பேசும்போது, “சில யூடியூபர்ஸ் அவர்களுடைய வீயூஸ்க்காக அடுத்தவர்களை பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் தப்பு தப்பாக பேசி விடுகிறார்கள். அவர்கள் பேசிவிட்டு ஒருநாள் சம்பளத்தை வாங்கி விட்டு போய்விடுவார்கள் ஆனால் அந்த வீடியோ பல வருஷங்களாக சோஷல் மீடியாவில் வலம் வந்து கொண்டே இருக்கும்.

அதை பார்க்கும் மக்கள் எங்களை பற்றி என்ன நினைப்பார்கள்? அதுவும் என்னை போன்றவர்கள் எல்லாம் நெகட்டிவ் கேரக்டரில் நடிப்பதாலே பலருக்கு பிடிக்காது. அப்படி இருக்கும்போது இவங்க ஏதாவது சொல்லும்போது அது உண்மையாகத்தான் இருக்கும் என்று நம்பி விடுகிறார்கள். அதனால் எங்களுடைய சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகள் வருகிறது. அதைப்பற்றி எல்லாம் இதுபோல வீடியோ வெளியிடுபவர்களுக்கு கவலையே கிடையாது.

எதற்காக இப்படி பண்ணுறாங்கன்னு தெரியல. யூடியூப் வீடியோக்களால் என்னோட வாழ்க்கையே நாசமா போச்சு. இது போன்று மோசமாக நம்மைப் பற்றி பேசி வீடியோ போட்டு விடுகிறார்கள். அதற்குப் பிறகு ஒரு நல்ல விசேஷத்துக்கு கூட நம்மை கூப்பிட யோசிப்பார்கள்.

அதேபோல நாங்கள் நெகட்டிவ்வாக நடிப்பதால் இவங்க தப்பானவங்க என்று நினைக்கிறார்கள். அதற்கு மேலே இவங்களும் வீடியோக்கள் வெளியிட்டு நம்மை மேலும் அசிங்கப்படுத்தி விடுறாங்க. சமீபத்தில் கூட நான் தற்கொலை செய்து இறந்துவிட்டேன் என்று ஒரு வீடியோ வெளியாகி பெரிதாக பேசப்பட்டது. நான் அப்படி அவர்களுக்கு என்னதான் பண்ணுனேன்னு எனக்கே தெரியல. எதற்காக என்னை பற்றி இப்படி எல்லாம் தப்பு தப்பா வீடியோ போடுறாங்க, இதற்கு முன்பும் பல தவறான விஷயங்களை பரப்பி இருக்கிறார்கள்.

திரையில் ஒரு கேரக்டராக நடிப்பவர்களின் நிஜ வாழ்க்கையிலும் அதே குணத்துடன் இருப்பார்கள் என்று நினைப்பது எவ்வளவு தவறானது என்பதை தேவி பிரியா பேசி இருக்கிறார்.

error: Content is protected !!
Secret Link