கேரளாவின் கோழிக்கோடு அருகே உள்ள தாமரசேரியில், 20 வயது இளம்பெண்ணை ஏப்ரல் மாதம் முதல் மிரட்டி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய வழக்கில் அனீஷ் மற்றும் சஜித் ஆகிய இருவரை இன்று (நவ., 28) காவல்துறையினர் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு போதைப்பொருள் கொடுத்து வன்கொடுமை செய்து, அதை வீடியோவாகப் பதிவு செய்து மிரட்டியதாகப் புகார் எழுந்துள்ளது. தற்போது தாமரசேரி டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் பலர் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கிறது.
பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல்.. பஸ் ஊழியர்கள் கைது
