Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை அருகே கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை….

தஞ்சை அருகே ரெட்டிப்பாளையம் ஒளிகைத் தெருவை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் குமார் (43). கூலித் தொழிலாளி. குமாரின் மனைவி மாரியம்மாள். இவர்கள் இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு குமாரிடம் கோபித்து கொண்டு மாரியம்மாள் வீட்டை விட்டு சென்றுவிட்டார்.

இதனால் மனவேதனையில் குமார் இருந்து வந்துள்ளார். இந்நிலையல் நேற்று மது அருந்திவிட்டு வந்த குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். குமார் தூக்கில் தொங்குவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் கள்ளப்பெரம்பூர் போலீசில் புகார் செய்தனர். உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து குமாரின் தாய் லட்சுமியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!