Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உறையூர் சிறுமி மாயம்…. போலீசில் புகார்

திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் மோகன்,இவருக்கு கல்பனா என்ற மனைவியும் மகேஸ்வரி (வயது 16) என்ற மகளும் உள்ளனர்.கடந்த 5 ஆண்டுகளுக்கு மோகன் இறந்துவிட்டார்.

இதனால் குடும்பத்தை காப்பாற்ற கல்பனா வீட்டு வேலைக்கு சென்று வந்தார். மகேஸ்வரி அந்த பகுதியில் உள்ள முறுக்கு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று கம்பெனியில் இருந்து வேலை முடித்து மகேஸ்வரி வீட்டுக்கு தாமதமாக வந்து உள்ளார். இதனை பார்த்த தாய் கல்பனா அவரை திட்டியதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த மகேஸ்வரி வீட்டிலிருந்து வெளியே சென்று விட்டார். பல இடங்களில் தேடிப் பார்த்தும் எங்கேயும் கிடைக்கவில்லை.

இது குறித்து அவரது தாய் கல்பனா உறையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மகேஸ்வரியை தேடி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!