Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

செல்போன் பயன்படுத்த தடை…. மும்பை மாணவி தற்கொலை

மராட்டிய மாநிலம் மும்பையின் மல்வானி பகுதியில் வசிக்கும் ஒரு தம்பதிக்கு 15 வயது சிறுமி உள்பட 4 குழந்தைகள் உள்ளனர்.  இவர்களில்  15 வயதான அந்த சிறுமி 9-ம் வகுப்புபடித்து வந்தார். அவர் அதிக நேரம் செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார். சமூகவலைதளத்தில் அதிக நேரம் செலவிட்டுள்ளார். இதனால் படிப்பில் அவர் கவனம் செலுத்தவில்லை.

இதனால்  பெற்றோரும், உறவினர்களும் சிறுமியை கண்டித்து செல்போனை பறித்துக்கொண்டனர். செல்போன் பயன்படுத்த அனுமதிக்காததால் மன உளைச்சலடைந்த சிறுமி கடந்த சனிக்கிழமை தான் வசிக்கும் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!