Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கடனை திருப்பிக்கேட்டால் போலீஸ் எஸ்ஐ மிரட்டுவதாக மனு….

தஞ்சை கீழவாசல் ஒட்டக்காரத்தெருவை சேர்ந்தவர் மணிமாறன். மாவுமில் நடத்தி வருகிறார். இவர் நேற்று தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு, கூடுதல் கலெக்டர் சுகபுத்ராவிடம் ஒரு மனுவை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது…தஞ்சையில் உள்ள அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியையும், அவருடைய கணவரான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரும், கடந்த ஆண்டு தன்னிடம் இருந்து ரூ.4 லட்சம் கடன் வாங்கினர். ஆனால் அதனை தற்போது வரை திருப்பி தரவில்லை. கடனை திருப்பிக்கேட்டால் மிரட்டுகிறார்கள். மேலும் கஞ்சா வழக்கு போடுவதாக மிரட்டுகிறாரக்ள். எனவே இது குறித்து விசாரித்து எனது பணத்தை மீட்டுத்தருவதோடு, எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!