Skip to content

இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி….தமிமுன் அன்சாரி பங்கேற்பு..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பண்டாரவாடையில் ஜெய்னூல் உலூம் அரபிக் கல்லூரி திருமண மண்டபத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மருத்துவ சேவை அணி சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைப் பெற்றது. இதில் நாகை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளருமான தமிமுன் அன்சாரி கலந்து கொண்டார்.  மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தமிமுன்அன்சாரி பேட்டி… பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினரின் சொத்துப் பட்டியலை வெளியிட்டது போல பா.ஜ.க, சொத்துப் பட்டியலையும், மோடி, அமித்ஷா, நட்டா, தோழமை கட்சியினரின் சொத்துப் பட்டியலையும் வெளியிட வேண்டும். தூய்மையாக இருந்தால் இதையும் வெளியிட வேண்டும். திமுக இதை உறுதியாக மறுத்துள்ளது. திராவிட இயக்கம் கசக்கிறது. தமிழ் நாடு என்ற வார்த்தை கசக்கிறது. தமிழர்கள் கசக்கின்றனர் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!