Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காலணி விற்பனை கடையில் ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்….

கோவை, பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதனையடுத்து மார்க்கெட் ரோடு பகுதியில் போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அந்தப் பகுதியில் உள்ள சந்தேகத்துக்கிடமான (செருப்பு) காலனி விற்பனை கடையில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது வெள்ளை நிற சாக்கு பைகளில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பதிக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்த ரூபாய் ஒரு லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 211 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்த பொள்ளாச்சி கரிகாலச் சோழன் வீதியில் வசிக்கும் வட மாநிலத்தை சேர்ந்த ஜிஜேந்திர குமார் ( 31) என்பவரை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!