Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெரம்பலூர் அருகே தெருநாய்கள் கடித்து புள்ளிமான் பலி……

பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய 4 வட்டங்களில் உள்ள காப்புக் காடுகளில் மான், மயில், முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட தலைமை மருத்துவமனை அருகில் வழி தவறி வந்த ஒன்றரை வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமானை தெரு நாய்கள் துரத்தி கடித்து

குதறியது. நாய்களிடம் தப்பிக்க அரசு மருத்துவமனைக்குள் புகுந்த மானை மருத்துவமனையில் பணியாற்றி வந்த பணியாளர்கள் சிலர் பார்த்துவிட்டு ஓடிச்சென்று நாய்களை துரத்தி உள்ளனர். ஆனால் நாய்கள் கடித்து குதறியதில் படுகாயம் ஏற்பட்டது. உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவித்து விரைந்து வந்த வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனைத்தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளித்தனர். இந்நலையில்  சிகிச்சைபலனின்றி புள்ளிமான் உயிரிழந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!