Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாம்….

கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த முகாமினை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் துவக்கி வைத்தார். கரூர், திருப்பூர், திருச்சி, ஈரோடு மாவட்டங்களை சார்ந்த 16 நிறுவனங்கள் இதில் பங்கேற்று தங்கள் நிறுவனத்திற்கு தகுதியான நபர்களை பணிக்கு தேர்ந்தெடுத்து வருகின்றனர். அப்போது பல்வேறு நிறுவனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பிரபு

சங்கர் பணி நியமன ஆணைகளை வழங்கி பாராட்டினார். முன்னதாக காலை 9 மணி முதலே வருகை தந்த மாற்றுத் திறனாளிகள் தங்கள் வருகையை பதிவு செய்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து காத்திருக்கின்றனர். அவர்களை வரிசையில் நேர்முக தேர்விற்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!