Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பஸ்சில் பயணம் செய்து வாக்குசேகரித்தார் ராகுல்…. படங்கள்…

கர்நாடகா சட்டசபை தேர்தல் 10ம் தேதி நடைபெற உள்ளது. மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அன்றயை தினம் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. அதன்பிறகு மே 13ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.தற்போது பாஜக ஆட்சி நடக்கும் நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெறும் முனைப்பில் காங்கிரஸ் கட்சி உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக நேற்று சோனியா காந்தி தார்வார் மாவட்டம் உப்பள்ளி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். மாறாக காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டவர்கள் கர்நாடகா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்து

வருகின்றனர். இந்த நிலையில் பெங்கலூரில் மக்களோடு மக்களாக ராகுல் இன்று பஸ்சில் பயணம் செய்தார். பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் பயணிகளிடம் வாக்கு சேகரித்தார். மேலும் பயணிகள் உற்சாகமாக ராகுலுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். மேலும் பஸ் டிரைவரிடம் கைக்குலுக்கி செல்பி எடுத்துக்கொண்டார். பள்ளி மாணவிகளுடன் செல்பி எடுத்து உற்சாகமடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!