Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல்வர் ஸ்டாலின் 8ம் தேதி திருச்சி வருகிறார்…. நிகழ்ச்சி முழு விவரம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும்  டெல்டா மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக இருந்தது.  ஒடிசா ரயில் விபத்து காரணமாக இந்த நிகழ்ச்சிகளில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி  முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 8ம் தேதி(வியாழன்) மாலை விமானம் மூலம் திருச்சி வருகிறார். அன்று திருச்சியில் தங்கும் முதல்வர் மறுநாள் காலை லால்குடி உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணிகளை பார்வையிடுகிறார்.

10ம் தேதி சென்னை திரும்பும் முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்து 11ம் தேதி விமானம் மூலம் சேலம் செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதல்வர், 12ம் தேதி  காலை குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!