Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் போலீசார் சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி…

திருச்சி மாவட்டம், துறையூர் சட்டம் ஒழுங்கு காவல்துறை மற்றும் முசிறி மதுவிலக்கு போலீசார் சார்பில், சர்வதேச போதைப்பொருள் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு , போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. துறையூர் செளடாம்பிகா பள்ளி முன்பு தொடங்கிய பேரணியை துறையூர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் கொடியசைத்து துவங்கி வைத்தார்.பேரணிக்கு சௌடாம்பிகா பள்ளியின் முதன்மை முதல்வர் ராமசாமி மற்றும் முசிறி மது விலக்கு பிரிவு ஆய்வாளர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு தலைமை தபால் நிலையம் வழியாக பாலக்கரை ஆத்தூர் ரோடு, மணிக்கூண்டு விநாயகர் கோவில் வழியாக சென்று பள்ளி வளாகத்தை அடைந்தனர். காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், முத்துச்செல்வன், ஜெபக்குமார் , போக்குவரத்து உதவி ஆய்வாளர் ராமசாமி உள்ளிட்ட காவலர்கள் உள்ளிட்டோர் பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!