Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் பண்டரிநாதன் கோவிலில் மூலவரின் பாதத்தை தொட்டு பக்தர்கள் தரிசனம்….

கரூர் மாநகர் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ பண்டரிநாதன் கோவிலில் பக்தர்கள் மூலவரின் பாதத்தை தொட்டு தரிசிக்‍கும் நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆசாட ஏகாதசி விழாவை முன்னிட்டு நேற்று மாலை 6 மணிக்‍கு துக்‍காரம் கொடி புறப்பாடு நடைபெற்றது. விழாவின் முக்‍கிய நிகழ்வாக இன்று , பண்டரிநாதன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு என்னை காப்பு சாற்றி, பால் ,தயிர் ,மஞ்சள், திருமஞ்சல்,

சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பூதேவி அம்மனுடன் பண்டரிநாத சுவாமிக்கு பல்வேறு நறுமண பூக்கள் மற்றும் வண்ண மாலைகள் அணிவித்த பிறகு தூப தீபம் காண்பிக்கப்பட்டு நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது.

பின்னர் மூலவரின் பாதத்தை தொட்டு வணங்க பக்‍தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 100-வது ஆண்டாக நடைபெறும் இந்த விழாவில் கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஆலயம் வருகை தந்து கருவறைக்குள் சென்று மூலவரின் பாதத்தை தொட்டு தரிசனம் செய்தனர். அதிகாலை 6 மணிக்‍கு அமராவதி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!