Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மஞ்சள் துணிப்பை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு பிரச்சாரம்..

கரூர் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதை தவிர்க்க வலியுத்தியும், மீண்டும் மஞ்சள் துணிப்பை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையிலும் விழிப்புணர்வு கலை குழு விழிப்புணர்வு பரப்புரை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த பரப்புரையை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் பிரபு சங்கர் தொடங்கி வைத்தார். இந்த கலை குழு பிரச்சாரம் கரூர் மாவட்டம் முழுவதும் வரும் 28ஆம் தேதி வரை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்ள முடிகிறது. அதில், கலை பாடல்கள் நாட்டியம் மூலவும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதை தவிர்க்க வலியுறுத்தியும் மீண்டும் மஞ்சள் பையை கடைகளுக்கு எடுத்துச் சொல்வதை ஊக்குவிக்கு வகையிலும், பொய்க்கால் குதிரை, கரகாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலைகள் மூலம் கலைக் குழு பிரச்சாரம் செய்ய உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!