Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

1500 பொங்கல் பானைகளில் பொங்கல் வைக்கும் விழா…. கோலாகலம்…

கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா தரகம்பட்டியில் உள்ள ஸ்ரீ பெரியகாண்டியம்மன், ஸ்ரீ கன்னிமாரம்மன், மதுரை வீரன், முனியப்பன் கோவில் பங்காளிகள் இணைந்து, திருவிழா

கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

கோவில் திருவிழாவின் முதல் நாளான நேற்று மாயனூர் காவிரி

ஆற்றிலிருந்து தீர்த்த நீர் எடுத்து வந்து கரகம் பாலித்தலுடன் திருவிழா தொடங்கியது. இரண்டாம் நாளான இன்று காலை சுவாமிகள் படுகளம் செல்லுதல் அதை தொடர்ந்து பாறைகளில் நெல் குத்தி எடுத்து வந்து பாரம்பரிய முறைப்படி மண்பானைகளில் பொங்கல் வைக்கும் வைபவம் விமர்சையாக நடைபெற்றது.

கோவிலின் அருகே வயல் பகுதிகளை சமப்படுத்தி கிட்டத்தட்ட 1500 பங்காளிகள் கொண்ட குடும்பத்தினர் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடி ஒரே இடத்தில் மண்பானைகளில் வரிசை வரிசையாக ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!