Skip to content

யுபிஎஸ்பி முதல்நிலை தேர்வு வெற்றிபெற்றவர்களுக்கு ரூ.25ஆயிரம்…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

 தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக, கடந்த மே 28-ம் தேதி நடைபெற்ற யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட உள்ளது.

 இந்த ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், ‘https://www.naanmudhalvan.tn.gov.in’ என்ற இணையதளத்தில் இன்று தொடங்கி வரும் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!