திருச்சி காமராஜர்புரம் 7வது கிராசை சேர்ந்தவர்கள் வெங்கடேஷ்வரன்-ஜோதி. இவர்களின் மகள் யுவஸ்ரீ(16) மெத்தடீஸ் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டை விட்டு வௌியில் சென்ற அவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது குறித்து செசன்ஸ் கோர்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
திருச்சியில் பள்ளி மாணவி மாயம்…
