Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திமுகவுக்கு ஆதரவு.. சீமான் பரபரப்பு பேட்டி..

நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது… நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக திமுக போட்டியிடவில்லை. 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக, பாஜக போட்டியிட்ட தொகுதிகளை எல்லாம் கூட்டணி கட்சிகளுக்குதான் பெரும்பாலான தொகுதிகளை ஒதுக்கியது. தூத்துக்குடியில் மட்டுமே எதிர்த்து போட்டியிட்டது. அது விதிவிலக்காக அமைந்துவிட்டது. 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் போட்டியிடுவதாக கூறுகின்றனர். ராமேஸ்வரத்தில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்டால், அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன் அப்படி பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடும் போது திமுக தமது உதயசூரியன் சின்னத்தில் ஒரு வேட்பாளரை நிறுத்தட்டும். பிரதமர் மோடிக்கு எதிராக திமுக நேரடியாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் அத்தொகுதியில் நாம் தமிழர் கட்சி போட்டியிடாது. பிரதமர் மோடியை எதிர்த்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளரை நாம் தமிழர் கட்சி ஆதரிக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை என்றார் சீமான்.. .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!