Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நடத்தையில் சந்தேகம்…..மனைவியை கொன்று தற்கொலைக்கு முயன்ற கொத்தனார்…

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள  மேட்டுத்தெருவை சேர்ந்தவர்  பால்ராஜ்(34), கொத்தனார். இவரது மனைவி  நித்தியகாமாட்சி(24). இவர்கள் 7 வருடத்திற்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன்  உள்ளனர். பால்ராஜ்க்கு குடிப்பழக்கம் உண்டு. வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் மனைவி மீது சந்தேகப்பட்டு  சண்டை போடுவார்.  சில நேரங்களில் அடித்து உதைப்பாராம்.

சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட சண்டையில் பால்ராஜ் அடுப்பில் இருந்த நெருப்பு கங்குகளை  அள்ளி மனைவி மீது போட்டாராம்.

இந்த நிலையில் நேற்று இரவும் வழக்கம் போல  சண்டை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பால்ராஜ் அம்மிக்கல்லை எடுத்து மனைவி தலையில் போட்டு கொலை செய்தார்.   செய்தார். பின்னர் போலீசுக்கு பயந்து தனது கழுத்தை தானே அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார்.

அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பால்ராஜ்,  நித்தியகாமாட்சி ஆகிய இருவரையும் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு  சென்றனர்.  அங்கு நித்தியகாமாட்சியை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டாார் என கூறினார்.  பால்ராஜ்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!