Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவையில் வஉசி சிலைக்கு அமைச்சர் முத்துசாமி மரியாதை….

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாள் இன்று அனைத்து மாவட்டத்திலும் அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் வ.உ.சிதம்பரனாரின் புகைப்படம் மற்றும் சிலைகளுக்கு மாலை அணிவித்தும் மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

கோவை வஉசி மைதானத்தில்  உள்ள வஉசி  சிலைக்கு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார், கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உட்பட திமுகவினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!