Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சீன பயணிகளுக்கு தடை…

சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அங்கிருந்து வரும் பயணிகள் தங்கள் நாட்டுக்குள் நுழைய மொராக்கோ தடை விதித்துள்ளது. ரபாத்: சீனாவில் தற்போது கொரோனா தொற்று பரவல் திடீரென வேகமெடுத்துள்ளது. அங்கு ஜெட் வேகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதன் எதிரொலியாக இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் உள்பட ஒரு டஜனுக்கும் அதிகமான நாடுகள் சீனாவில் இருந்து பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்நிலையில், வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோ சீன பயணிகள் தங்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக, மொராக்கோ வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: சீனாவில் கொரோனா தொற்று தொடர்பான சுகாதார நிலைமை மோசமடைந்துள்ளது. இந்த சூழலில் மொராக்கோவில் ஒரு புதிய கொரோனா அலை மற்றும் அதன் அனைத்து விளைவுகளையும் தவிர்ப்பதற்காக சீனாவில் இருந்து வரும் அனைத்துப் பயணிகளும், மொராக்கோ எல்லைக்குள் நுழைவதை தடைசெய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை இரு நாட்டு மக்களுக்கு இடையேயான நேர்மையான நட்பையோ அல்லது இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டாண்மையையோ பாதிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!