Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை அருகே நேஷன் பில்டர் விருது வழங்கும் நிகழ்ச்சி….

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை ரோட்டரிச் சங்கம் சார்பில் நேஷன் பில்டர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு அய்யம் பேட்டை பேட்டை ரோட்டரி சங்கத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னதாக சங்க ஆலோசகர் காதர் பாட்சா வரவேற்றார். உதவி ஆளுநர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். வருங்கால ஆளுநர் பாஸ்கர் அய்யம் பேட்டை அரசு, உதவி பெறும், தனியார் பள்ளியைச் சேர்ந்த 38 ஆசிரியர்களுக்கு விருது வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் அய்யம் பேட்டை ரோட்டரிச் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பொது மக்கள் பங்கேற்றனர். செயலர் முகம்மது ரஹ்மத்துல்லா நன்றி கூறினார். சுற்றுச் சூழல் மேம்பாட்டிற்காக நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்களுக்கு மரக் கன்றுகள் வழங்கப் பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!