
அந்த ஓட்டலில் மாதுளை பழச்சாறு ஆர்டர் செய்ய விரும்பியிருக்கிறார். இதற்காக மொழிபெயர்ப்பு செயலியை பயன்படுத்தியபோது மாதுளை பழச்சாறுக்குப் பதிலாக, அதன் ஆங்கில வார்த்தையான pomegranate-ஐ தவறாக மொழிபெயர்த்து வழங்க, இறுதியில் grenade (கையெறி குண்டு) என்று ஆர்டர் செய்துவிட்டார். அவர் கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த வெயிட்டர், கையெறி குண்டு வைத்து மிரட்டுவதாக நினைத்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துவிட்டார்.
இதைத்தொடர்ந்து காவல் துறை அதிகாரிகள் விரைந்து வந்து சுற்றுலா பயணியை கைது செய்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவர் தங்கி இருந்த ஓட்டல் அறையிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அவரிடமோ, அவர் தங்கியிருந்த அறையிலோ எந்த ஒரு ஆயுதமும் இல்லை. எனவே, அவர் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் ஓட்டல் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஓட்டலில் சோதனை செய்வதற்கு முன்பே அங்கிருந்து வெளியேற முயன்றதால் அவரை கைது செய்ததாக தெரிவித்தார்.
