Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இடி மின்னல் தாக்கியதில் செல்போன் வெடித்து 3 பெண்கள் காயம்…. திருச்சி அருகே பரபரப்பு…

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் வகுத்தாழ்வார்பட்டியைச் சேர்ந்தவர் ராமு மனைவி மணிமேகலை(30) ஏழுமலை மனைவி முத்துலட்சுமி(40), மற்றும்
அடைக்க கோனார் மனைவி பெரியம்மாள்(55) ஆகிய மூன்று பேரும் சின்னகோனார்பட்டியில் உள்ள விளைநிலத்தில் இன்று பிற்பகலில் நாற்று நடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மழை பெய்த கொண்டிருந்த நிலையில், வரப்பில் நின்றுக்கொண்டிருந்தவர் மீது மின்னல், இடி விழுந்ததாக கூறப்படுகிறது. இடி

அதிர்வில் மணிமேகலை இடுப்பில் வைத்த்திருந்த கைப்பேசி வெடித்து உள்ளது. அதில் மணிமேகலை, முத்துலெட்சுமி, பெரியம்மாள் ஆகியோர் காயமடைந்துள்ளனர். அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்ட மூவரும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்நோயாளியாக சிகிச்சையில் உள்ளனர். இச்சம்பவம் குறித்து மருங்காபுரி வருவாய்த்துறையினர் மற்றும் வளநாடு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இடி மின்னல் தாக்கிய சம்பவத்தில் செல்போன் வெடித்து மூன்று பேர் காயம் ஏற்பட்டது இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!