Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நகைக்காக மூதாட்டி அடித்துக்கொலை…

தேனி மாவட்டம், கம்பம் சுருளிப்பட்டி சாலையில் வசித்து வந்தவர் மணிமுத்து மனைவி ராமுத்தாய் (88) . இவர் மகன்வழி பேரன் போத்திராஜா என்பவரது பராமரிப்பில் இருந்தார். நேற்று பாட்டியின் வீட்டில் மின் இணைப்பு பழுது ஏற்பட்டதால் போத்திராஜா சரி செய்துவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில், பாட்டியின் வீடு திறந்து கிடைப்பதை பார்த்த பக்கத்து வீட்டுக்காரரான மணிகண்டன், வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, ராமுத்தாய் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவர், போத்திராஜாவிடம் பாட்டி வீட்டில் மயங்கி கிடப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து போத்திராஜா வீட்டிற்கு சென்று பார்த்த போது பாட்டி ரத்தகாயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு, ராமுத்தாய் அணிந்திருந்த தங்க நகையையும் காணாமல் போயிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கம்பம் தெற்கு காவல் நிலைய போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து மூதாட்டியை அடித்துக் கொலை நபர்களை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!