Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் பாம்பு கடித்து 10ம் வகுப்பு மாணவி பலி…

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள மீனம்பட்டியைச் சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மகள் சந்தியா. அங்குள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், வீட்டின் முன்பு நின்றிருந்த சந்தியாவை கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாம்பு கடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக

அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், விஷம் ரத்தத்தில் கலந்ததால் சந்தியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இன்று உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!