Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சுரங்கம்…41 தொழிலாளர்கள் மீட்பு…. முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

உத்தரகாண்ட் சுரங்கத்திற்குள் சிக்கி தவித்த 41 தொழிலாளர்களும் 17 நாட்களுக்கு பிறகு நேற்று இரவு மீட்கப்பட்டனர். தற்போது அவர்கள் நலமுடன் உள்ளனர். இந்த மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கும்,  மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கும்  தமிழக முதல்வர்  ஸ்டாலின் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து  முதல்வர் ஸ்டாலின்  வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில், “உத்தரகாசி சுரங்கப்பாதை சரிவில் சிக்கிய 41 தொழிலாளர்களும் 17 நாட்களுக்குப் பிறகு  வெற்றிகரமாக மீட்கப்பட்டது நிம்மதியளிக்கிறது. மீட்புப் பணியில் அயராது உழைத்த துணிச்சலான மீட்புக் குழுக்கள் மற்றும் எலிவளை சுரங்கத்தொழிலாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். துணிச்சல் மிக்க 41 தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வலிமையும் உறுதியும் கிடைக்க வாழ்த்துகிறேன்” என்று  அதில் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!