Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வௌ்ளத்தில் தத்தளிக்கும் மக்களை மீட்கும் ராணுவக்குழு…

மிக்ஜாம் புயல் காரணமாக நாளை சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பபட்டுள்ளது. அதன்படி, இன்றும், நாளையும் வட கடலோர தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது 20.4 செ.மீக்கு மேல் மழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது.

மிக்ஜாம் புயல் நாளை தமிழகத்தை ஒட்டி கடக்கவுள்ளதால், 60-70 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால், நாளை சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளித்த தமிழ் நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த பொது விடுமுறையின்போது, அத்தியாவசிய சேவைகளான பால், தண்ணீர் மற்றும் பெட்ரோல் பங்க்

சேவைகள் இருக்கும் என்றும், மழை, வெள்ளம், புயல் பாதிப்புகளில் இருந்து மக்களைப் பாதுகாப்பது மற்றும் மீட்பு சேவையில் ஈடுபடும் ஊழியர்கள் மட்டும் பணியில் இருப்பார்கள் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.இந்நிலையில்  அதிகனமழையால் சென்னை, மணப்பாக்கத்தில் வௌ்ளத்தில் தத்தளிக்கும் குடும்பத்தினரை மீ்ட்கும் பணியில் தீவிரத்துடன் ராணுவக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.  முகலிவாக்கம், மணவாக்கம் பகுதிகளில்  12 பேர்  கொண்ட ராணுவக்குழுவினர் மீட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!